×

கடிக்க மொறு மொறு... ருசிக்க ரொம்ப ஜோரு ரோஸ் ஆப்பிளுக்கு எகிறுது மவுசு

*மருத்துவ குணமும் கொட்டி கிடக்கிறது

ஒட்டன்சத்திரம்  : மருத்துவ குணங்கள் கொண்ட ரோஸ் ஆப்பிள் நல்ல சுவையுடன் இருப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சாப்பிடுகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாட்சி தலையூத்து அருவி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் ரோஸ் ஆப்பிள் மரம் வளர்க்கப்படுகிறது. இவை வெப்பமண்டபம் சார்ந்த பகுதியில் வளரக்கூடிய மரமாகும். தமிழ்நாடு, கேரளா மட்டுமின்றி ஆசிய நாடுகளான இந்தோனிசியா, வியட்நாம், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பகுதிகளிலும் வளரக்கூடியது. இதன் பழங்கள் அழகாகவும், நல்ல ரோஸ் கலர் நிறத்திலும் இருக்கும்.

இதனை சாப்பிடுவதற்கு மொறு மொறுவென்றும், சுவையாகவும் இருக்கும். ரோஸ் ஆப்பிள் ஆப்பிளை போன்ற சுவையுடையது. ஆனால் ஆப்பிளை விட மெல்லியதாகவும், வாசனையுடையதாகவும் இருக்கும். இதன் மரங்களின் உயரம் 20 அடி முதல் 24 அடிக்கு மேலாகும். இம்மரத்தை வளர்த்து வரும் விருப்பாட்சியை சேர்ந்த கண்ணாயிரம் கூறுகையில், ‘‘ரோஸ்ஆப்பிள் செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, சர்க்கரை, தோல் நோய், காய்ச்சலை  கட்டுப்படுத்துதல், புற்றுநோயை தடுத்தல் என பல்வேறு மருத்துவ குணங்களை உடையது.

ரோஸ்ஆப்பிளை உணவாக சாப்பிடவும் ஜாம், ஜெல்லி, ஒயின், ஊறுகாய் தயாரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இம்மரம் 30 முதல் 35 ஆண்டுகள் வர பழங்களை கொடுத்து பலன்தரும். இப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து இதனை ருசித்து வருகின்றனர். மேலும் ரோஸ்ஆப்பிள் மரங்களை நடவு செய்ய இப்பகுதியில் ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rose Apple ,Oddanchatram ,medicine
× RELATED சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது...