கீழக்கரை-ராமநாதபுரம் அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

* பயணிகள் பாதிப்பு

கீழக்கரை : கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்வதற்கு அரசு மற்றும் தனியார் பஸ்களில் ரூ.15 கட்டணம் வசூல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் ரயில்வே கேட் அருகில் மேம்பாலம் அமைக்கப்படுவதால் அனைத்து பஸ்களும் ஈ.சி.ஆர். சாலையில் கலெக்டர் அலுவலகம் வழியாக ராமநாதபுரம் செல்கின்றன. இதனால் கும்பகோணம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பஸ்களில் மட்டும் டிக்கட் ரூ.20 வசூல் செய்கின்றனர். தனியார் பஸ் மற்றும் வேறு கோட்டங்களிலிருந்து வரும் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. ஆனால் கும்பகோணம் கோட்ட பஸ்கள் மட்டும் கட்டணத்தை கூடுதலாக வசூல் செய்கின்றனர். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘மக்கள் டீம்’ அமைப்பு சார்பாக அமைப்பாளர் அப்துல்காதர் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். சிலர் சொந்தமாக தொழில்செய்கின்றனர். இதனால் ஏராளமானோர் தினமும் கீழக்கரையிலிருந்து ராமநாதபுரம் செல்கின்றனர். ரூ.15 கொடுத்து டிக்கட் எடுத்த நிலையில் தற்போது கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ்களில் மட்டும் டிக்கட் ரூ.15 என்றும் அதே டிக்கட்டில் கீழே கூடுதல் கட்டணம் ரூ.5 என்று அச்சடித்து ரூ.20 வசூல் செய்கின்றனர். தனியார் பஸ்களை போல் பழைய கட்டணத்தையே அரசு பஸ்களிலும் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>