×

விவசாயிகளின் கடன் தள்ளுபடி கோரி கலெக்டர் அலுவலகத்தில் தண்டோரா போராட்டம்

தஞ்சை: கஜா புயலால் பாதித்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யகோரி தஞ்சையில் தண்டோரா அடித்து நூதன போராட்டம் நடந்தது. கஜா புயலால் பாதித்த விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் தண்டோரா அடித்து நூதன போராட்டம்  நடந்தது. தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் தலைமை வகித்தார்.  தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.  போராட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.

போராட்டம் முடிவில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் கூறியதாவது: பல மாநிலங்களில் விவசாய கடன்கள் ₹2 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் கடன் தள்ளுபடி செய்யவில்லை. எனவே, கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன், தேசிய வங்கிகளில் வாங்கிய  கடன், சுய உதவிக்குழு கடன், கல்விக்கடன் என அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதுவரை விவசாயிகள் யாரும் கடன்களை கட்ட வேண்டாம். இதை நாங்கள் கிராமங்கள் தோறும் சென்று தண்டோரா  அடித்து சொல்லவுள்ளோம். கஜா புயலால் பாதித்த பகுதிகளை தேசிய பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகையை விரைந்து வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள்  குறைதீர்க்கும் கூட்டம் கடந்த 2 மாதமாக நடக்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Office ,Collector , Farmers lend,debt,office ,collector, Dandora's struggle
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற...