×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டாவில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்குமா?: சட்டசபையில் எம்எல்ஏக்கள் குரல் கொடுக்க வலியுறுத்தல்

தஞ்சை: கஜா புயல் காவிரி டெல்டா பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று வரும் 2ம் தேதி கூடும் சட்டசபையில் அனைத்துகட்சி எம்எல்ஏக்களும் குரல் கொடுக்க வேண்டுமென  என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கஜா புயல் கடந்த மாதம் 16ம் தேதி கரையை கடந்தது. புயல் தாக்குதலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெரியளவில் பாதிப்பை சந்தித்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை  இழந்து வருமானமின்றி தவிக்கின்றனர். குறிப்பாக, தங்கள் குழந்தைகளுக்கு கல்விக் கட்டணத்தைகூட செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். இதனால், மாணவர்களின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும் என்று  கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக சட்டசபை வரும் 2ம் தேதி கூடுகிறது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே பொறுப்பேற்று கொள்ள வேண்டுமென சட்டசபையில் அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று  பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுபற்றி, தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் சதாசிவக்குமார் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் ஏராளமான மாணவ, மாணவிகள் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், டிப்ளமோ என்று  பலதரப்பு கல்வி பயின்று வருகின்றனர். கடந்த நவம்பர் 16ம் தேதி அதிகாலையில் கஜா புயல் கரையை கடந்தபோது வீசிய சூறைக்காற்றால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது.  புயலால் பெற்றோர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தங்களது குடும்பத்தை கவனிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு ஒரு சில தனியார் பல்கலைக்கழகம், மாணவ, மாணவிகளின் கல்வி கட்டணத்தை ஏற்று கொண்டுள்ளது. ஆனால், அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை அரசு ஏற்று கொள்வதாக இதுவரை எந்த  அறிவிப்பையும் வெளியிடவில்லை.

எனவே, வரும் 2ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை கூட்டத்தொடரில் புயலால் பாதித்த  மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்று கொள்ள வேண்டுமென அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் ஒன்றாக இணைந்து குரல்  கொடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் ஜீவக்குமார் கூறும்போது, ‘‘கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் பெற்றோர்கள் இன்னும் மீண்டு எழவில்லை. இந்த நேரத்தில் தங்களது குழந்தைகளை எப்படி  உயர்கல்வி படிக்க வைப்பது என்று கவலையில் பெற்றோர் உள்ளனர். எனவே, கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி கட்டணத்தை முழுமையாக ஏற்று கொள்வதாக அரசு அறிவிக்க  வேண்டும். இதற்கு வரும் 2ம் தேதி நடக்கவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் எல்லா எம்எல்ஏக்களும் ஒன்றாக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,delta victims ,storm ,Ghazan , Gajah suffered ,storm,education fees?,e MLAs , assembly
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; தமிழ்நாடு...