×

முத்தலாக் சட்டத்துக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்ததில் உடன்பாடு இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு

சென்னை: முத்தலாக் சட்டத்துக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை ராயபுரம் எஸ்.என்.செட்டி தெருவில் வடசென்னை மக்களின் மருத்துவர் ஜெயச்சந்திரன் நினைவஞ்சலி கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், அமைச்சர் ஜெயக்குமார் உள்பட அரசியல் பிரமுகர்கள் பலர் கலந்து  கொண்டனர். அப்போது, அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:முத்தலாக் சட்டத்துக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்ததில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இருந்தபோதும் அன்வர்ராஜா எம்பி முத்தலாக் சட்டம் குறித்து தெளிவாக கூறியுள்ளார்.

மத  விஷயங்களில் அரசு தலையிடக்கூடாது. இதுதொடர்பாக எழுந்த கருத்துக்களால் மசோதாவை நாங்கள் ஆதரிக்கவில்லை. இதனால்தான் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம். ஒரு மாநிலத்தில் மைனாரிட்டி இஸ்லாமியர்களின்  நலன் காப்பாற்றப்படவேண்டும்.இஸ்லாமிய சட்டங்கள் சரத்துக்குள் இருக்கிறது. தனிநபர் விஷயங்களில் தலையிடக்கூடாது. அதனடிப்படையில்தான் மத்திய அரசு இந்த விஷயங்களில் தலையிடக்கூடாது என அன்வர்ராஜா வெளிநடப்பு செய்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayakumar ,walkout ,AIADMK ,speech , Muttalak , AIADMK , Minister Jayakumar's ,
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...