×

மீனம்பாக்கம் மேம்பால சாலையில் ஜல்லி குவியலால் அடிக்கடி விபத்து : வாகன ஓட்டிகள் தவிப்பு

ஆலந்தூர்: மீனம்பாக்கம் மேம்பால சாலையில் உள்ள ஜல்லி குவியலால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலை வழியாக சென்னை  விமான நிலையம் வந்து  செல்லும் வாகனங்களால் அப்பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால், விமான பயணிகள் நெரிசலில்  சிக்கி குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் விமானங்களை தவறவிடும் நிலை ஏற்பட்டது. இப்பிரச்னைக்கு தீர்வாக கடந்த 2008ம் ஆண்டு  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், விமான நிலையம் எதிரே, மீனம்பாக்கம் ஜி.எஸ்.டி சாலையில்  1.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட்டது.  இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்பட்டது. விமான நிலையத்துக்கு செல்வோர் மட்டுமின்றி தாம்பரம் - கிண்டி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியாக சென் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரமரிப்பில் இருந்த இந்த மேம்பாலம், பின்னர் தமிழக நெடுஞ்சாலை துறை கட்டுபாட்டுக்கு வந்தது.

சமீப காலமாக நெடுஞ்சாலை துைற அதிகாரிகள் இந்த மேம்பாலத்தில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால, மின்விளக்குகள் பழுதடைந்து இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி, மேம்பால சாலையில் இருந்து பெயர்ந்த ஜல்லி கற்கள், இருபுறமும் குவிந்துள்ளது. இதனால், மேம்பாலத்தில் வேகமாக வரும்  இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த ஜல்லி மற்றும் மண் குவியலால் சறுக்கி கீழே  விழுந்து அடிபட்டு செல்லும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, பெரிய விபத்து ஏற்படும் முன் மேம்பால சாலையில் உள்ள மணல் மற்றும் கருங்கல் ஜல்லி குவியலை உடனடியாக அகற்றவும், முறையாக பராமரிக்கவும் நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டு, என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jimi ,road ,motorists ,Meenambakkam , Jilli holey ,Meenambakkam superior road ,accidental, motorists halves
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...