இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் இளைய சமுதாயத்தினருக்கு முன் மாதிரியாக திகழ்கிறார்; முதல்வர் பழனிசாமி

சென்னை: இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் இளைய சமுதாயத்தினருக்கு முன் மாதிரியாக திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கு தனது நிறுவனத்தில் பணி வழங்கியவர் சீனிவாசன் என்று முதலமைச்சர் புகழாரம் சூட்டினார். கிரிக்கெட்டு மட்டும் அல்லாமல் பேட்மிண்டன், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுக்கு ஊக்கமளித்தவர் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். முன்னதாக இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்றது. இதில் இதில் டோனி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மேகதாது அணை விவகாரம்: கர்நாடகா அரசின்...