×

பெரம்பலூரில் போக்சோ சட்டத்தில் கைதானவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் பணிநீக்கம்

பெரம்பலூர்: பெரம்பலூரில் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இருவேறு வழக்குகளில் கைதிகளுக்கு சாதகமாக பேசியதாக அரசு வழக்கறிஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்த சித்ராவை அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து கடந்த மாதம் அம்மாவட்ட ஆட்சியர் சாந்தா பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தின் மகிளா நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்த சித்ரா போக்சோ வழக்கில் கைதானவருக்கு சாதகமாக பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசி வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியதாக குற்றசாட்டு எழுந்தது.

அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர், பெரம்பலூர் அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோன்று, மற்றொரு வழக்கில் குழந்தை திருமணம் தடுப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட சிறுமியிடம், அரசு வழக்கறிஞர் சித்ரா தொலைபேசி மூலம் சுமார் 30 நிமிடங்கள் பேசிய ஆடியோ வெளியானது. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வந்த சித்ராவை பணிநீக்கம் செய்யக்கோரி ஆட்சியர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prosecutor ,office ,detainees ,Perambalur ,Pope , Perambalur, government attorney, dismissal, order
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...