×

ஹெச்ஐவி ரத்தம் ஏற்றியதாக சென்னை பெண் புகார் : அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு

சென்னை : சாத்தூரில் கர்பிணிப் பெண்ணிற்கு ஹெச்ஐவி தொற்று ரத்தம் ஏற்றியது போல தனக்கும் ஏற்றப்பட்டது என்று சென்னை பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் கூறியிருந்தார். இந்நிலையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரிய வருகிறது என்றும், சென்னை பெண் புகார் குறித்து ஆய்வு செய்துவிட்டு பின்னர் பதிலளிக்கிறேன் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Wijepaskar , HIV blood,Minister Vijayapaskar,Pregnant Woman
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு