×

மைனர் பெண்ணுக்கு ஆசை காட்டி 80 வயது ஆசாமி காமக்களியாட்டம்: சமூக வளைதளங்களில் வைரல் ஆகும் வீடியோ

திருமலை: ஆந்திராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மைனர் பெண்ணுக்கு பண ஆசை காண்பித்து காம களியாட்டம் நடத்தியது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 80 வயது தெலுங்கு தேசம் பிரமுகரை கைது செய்ய பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், காஜுவாக்கா 63வது வார்டை  சேர்ந்தவர் நல்லி சாதுராவ் (80). இவர், தெலுங்கு தேசம் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான தெலுங்கு நாடு டிரேட் யூனியன் கவுன்சில் நிர்வாக குழு உறுப்பினர். இவர் அந்த பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள குடும்ப பெண்களிடம் தனக்கு அமைச்சர்கள், எம்பி, எம்எம்ஏக்கள் அனைவரையும் நன்கு தெரியும். மாநில அரசின் மக்கள் நலத்திட்ட உதவிகளான வீடு, பென்ஷன், ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி தனது காம வலையில் விழ வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், 17 வயது கொண்ட மைனர் பெண்ணுக்கு பண ஆசை காண்பித்து  தனது  அலுவலகத்தில் காமக்களியாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கிடையே தனது காம களியாட்டம்  குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருப்பது குறித்து அறிந்த நல்லிசாதுராவ் தற்போது  தலைமறைவாகி உள்ளார். தனது பேத்தி வயதுள்ள மைனர் பெண்ணுக்கு பண ஆசை காண்பித்து காமக்களியாட்டத்தில் ஈடுபட்ட நல்லி சாதுராவை கைது செய்ய வேண்டும் என்று மகளிர் நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minor ,Asmami , Minor,80-year-old Asmami Bachelor,Love, Viral, video of social arc
× RELATED புளியந்தோப்பில் முன்விரோதம் காரணமாக...