×

தாலுகா நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் : நவகர்நாடக ரக்‌ஷணா வேதிகே முடிவு

தங்கவயல்: தங்கவயல் தனி தாலுகாவாக அறிவித்து 6 மாதங்கள் கடந்தும் இன்னும் முழுமையாக நிர்வாக கட்டமைப்பு வசதி ஏற்படுத்தாமல் உள்ளதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்த நவகர்நாடக ரக்‌ஷணா வேதிகே முடிவு செய்துள்ளது. இது குறித்து அமைப்பின் தலைவரும், வக்கீலுமான ராஜகோபால்கவுடா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, தங்கவயலில் அம்ருத் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்காக பல மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. சில இடங்களில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக கான்கிரீட் பைப்புகள் பதிக்கப்பட்டும் பள்ளங்களை சரியாக மூடாமல் இருப்பதால் பொதுமக்கள் நடந்து ெசல்ல முடியாமலும், பைக்கில் செல்ல முடியாமலும் அவதிப்படுகிறார்கள்.  

தங்கவயலை தனி தாலுகாவாக உருவாக்க கோரி 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை வைத்து நடத்திய போராட்டத்தின் பலனாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் தாலுகா அறிவிக்கப்பட்டது. தனியாக தாசில்தாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் தாலுகா நிர்வாகம் செயல்பட துவங்கி 6 மாதம் முடிந்தும் நிர்வாக கட்டமைப்பு வசதி செய்யப்படாமல் உள்ளது. இதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும் அமைப்பின் சார்பில் கர்நாடக மாநிலம் உதயமான தினம் வரும் 30ம் தேதி விமர்சையாக கொண்டாடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Administration ,Navakarnadaka Rakshana Weedge , Struggle,Taluk Administration, End of Navakarnadaka Rakshana Weedge
× RELATED நெல்லை மேற்குத் தொடர்ச்சி மலையில்...