×

சித்ரா பக்தவச்சலம் அரசியல் பிரவேசத்துக்கு வரவேற்பு : தாலுகா மஜத தலைவர் ராஜேந்திரன் அறிவிப்பு

தங்கவயல்: கணவர் மறைவுக்கு பிறகு அமைதியாகி விடாமல் தைரியமாக அரசியல் பிரவேசம் செய்துள்ள சித்ரா பக்தவச்சலத்தை வரவேற்பதுடன், அவருக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தங்கவயல் தாலுகா மஜத தலைவர் கே.ராஜேந்திரன் தெரிவித்தார். தங்கவயல் சட்டபேரவை தொகுதி முன்னாள் உறுப்பினரான மு.பக்தவச்சலம் கடந்த நவம்பர் 28ம் தேதி மாரடைப்பால் காலமானார். அவர் மறைந்து ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், கணவர் வழியில் தானும் அரசியலில் கால் பதித்து மக்கள் சேவை செய்வதாக சித்ரா பக்தவச்சலம் அறிவித்ததுடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அரசியலில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை பக்தவச்சலம் வீட்டிற்கு சென்ற தங்கவயல் தாலுகா மஜத தலைவர் கே.ராஜேந்திரன் மற்றும் தாலுகா கட்சி நிர்வாகிகள், பக்தவச்சலம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்ததுடன், அரசியலில் கால் பதித்துள்ள சித்ரா பக்தவச்சலத்திற்கு பூச்செண்டு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, சகோதரி சித்ராபக்தவச்சலம் அரசியலில் கால் பதி்த்து மஜதவை வளர்ப்பதாக கூறியுள்ளார். அவரின் தைரியமான முடிவை வரவேற்பதுடன் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajendran Announcement ,Taluka Mahajan , Receipt of Chitra Dakshinachala Polygamy, Taluka Majatha Chairperson, Announces Rajendran
× RELATED மகாராஷ்டிராவில் சாதித்தது மகா விகாஸ் அகாடி கூட்டணி