உளவு கேமரா உள்ளிட்ட நவீன கருவிகளை வாங்க ஆர்பிஎப்.புக்கு அதிகாரம்: ரயில்வே வாரியம் உத்தரவு

புதுடெல்லி: ரயில்வே பாதுகாப்பு படைக்கு தேவையான அதிநவீன கருவிகளை  கொள்முதல் செய்யும் அதிகாரத்தை ஆர்பிஎப் மண்டல அதிகாரிகளுக்கு  ரயில்வே வாரியம் அளித்துள்ளது.ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே சொத்துகளை பாதுகாக்கும் பணியை  ‘ஆர்பிஎப்’ என சுருக்கமாக அழைக்கப்படும், ‘ரயில்வே பாதுகாப்பு படை’  கவனித்து  வருகிறது. இந்த படைக்கு தேவையான உயர் பாதுகாப்பு  உபகரணங்களை வாங்குவதற்கான அனுமதியை தற்போது வரை ரயில்வே  வாரியம் வழங்கி வருகிறது.

 

இந்நிலையில், இந்த உபகரணங்களை வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு  அதிகாரத்தை  ரயில்வே பாதுகாப்பு படையின் மண்டல அதிகாரிகளுக்கு ரயில்வே  வாரியம் வழங்கியுள்ளது. அதன்படி, ஆர்பிஎப்.க்கு தேவையான உளவு கேமராக்கள்,  துப்பாக்கிகள், உடலில் பொருத்தி செல்லும் கேமராக்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன  தொழில்நுட்ப கருவிகளை மண்டல அதிகாரிகளே இனிமேல் வாங்க முடியும்.   டிரோன் கேமரா, ஸ்கேனிங் கருவிகள் போன்றவையும் இந்த பட்டியலில் இடம்  பெற்றுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>