×

சபரிமலையில் மண்டல பூஜை சுவாமிக்கு அணிவிக்க தங்க அங்கியை சுமந்து சென்ற பட்டிவீரன்பட்டி பக்தர்

பட்டிவீரன்பட்டி: சபரிமலையில் நேற்று நடந்த மண்டல பூஜை விழாவில் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ஐயப்ப பக்தர்  ஐயப்ப சாமிக்க அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமந்து சென்றார்.திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ராமையா (55), ஐயப்ப பக்தர். ஐயப்ப சீசன் காலங்களில் இவர் 12 வருடங்களுக்கும் மேலாக சபரிமலையில் தங்கி அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு சார்பில் சேவை செய்து வருகிறார். மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களிலும், சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களிலும் தவறாமல் சபரிமலை சென்று விடுவார். முக்கியமாக மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை வருவர். அப்போது இவர் ‘எமர்ஜென்சி’ பிரிவு எனப்படும் பிரிவில் பணியாற்றுவார்.

இவரது பணியை பாராட்டி, மண்டல பூஜையின் போது ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமந்து வரும் வாய்ப்பை அகில பாரத ஐயப்பா சேவா அமைப்பு இவருக்கு வழங்கியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி ஐயப்ப சுவாமி தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை நடக்கும். இதற்காக தங்க அங்கி உள்ள ஆபரண பெட்டியை பட்டிவீரன்பட்டியை சேர்ந்த ஐயப்பர் ராமையா அப்பச்சி மேட்டில் இருந்து கோயிலுக்கு தலைச்சுமையாக கொண்டு சென்றார்.

இதுபற்றி ராமையா கூறுகையில், ‘சபரிமலையில் தொடர்ந்து செய்து வரும் சேவைக்காக அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமக்கும் பாக்கியத்தை எனக்கு தொடர்ந்து 9வது முறையாக வழங்கியுள்ளது. என் ஆயுள் முழுவதும் இச்சேவையை செய்வேன்.  என்னுடன் விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில், திருநெல்வேலியை சேர்ந்த சுப்பிரமணி ஆகியோரும் தங்க அங்கியை சுமந்து சென்றனர்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : devotee ,Pattiviranpatti ,pooja ,Sabarimala , Sabarimala, Mandala Pooja Swamy, Golden Angi, Pattiveeranpatti devotee
× RELATED மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை