அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: 2019-ம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15-ல் அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ல் பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் கோலாகலமாக நடைபெறும். இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கென பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.  

மதுரை மாவட்டத்தில் ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரத்திலும், ஜனவரி 16-ம் தேதி பாலமேட்டிலும், ஜனவரி 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: