×

மதுரை, தேனி மாவட்ட ஆவின் சேர்மனாக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா பதவியேற்பு

மதுரை: கட்சியில் இருந்து நீக்கப்பட்டு அடுத்த 4 நாட்களில் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா மதுரை ஆவின் தலைவராக பதவி ஏற்றுக்கொண்டார். மதுரை, தேனி மாவட்ட பால் உற்பத்தி கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா கடந்த 19-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநாளில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அவர் ஓ.பி.எஸ்-ன் நிர்பந்தத்தால் அடுத்த 4 நாட்களில் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.ராஜா மதுரை ஆவின் தலைவராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மதுரை, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் பதவியை எதிர்ப்பார்த்து காத்திருந்த பெரியகுளம் செல்லமுத்துவுக்கு கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவரை சரிக்கட்டும் நோக்கத்திலேயே ஓ.ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பல்வேறு தரப்பினரும் கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : O. Raja ,Vice Chairperson ,Theni District ,Madurai , Deputy chief minister,Panneerselvam,brother,O Raja,sworn,Madurai, Theni,Aavin,
× RELATED அழகும், மருத்துவமும் நிறைந்த கோழிக்கொண்டை