டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே எனது நீண்டநாள் கனவு: சாஹல்

டெல்லி: இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்துவீச விரும்புவதாக சூழல் பந்துவீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தற்போது அஷ்வின், ஜடேஜா, குல்தீப், சாஹல் என 4  சுழற்பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் முன்னணி வீரர்களான அஷ்வின் மற்றும் ஜடேஜா டெஸ்ட் அணியில் ஆடி வருகின்றனர். இதேபோல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் குல்தீப், சாஹல் கூட்டணி விளையாடி வருகிறது. ஒருநாள் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் சாஹலுக்கு டெஸ்ட் அணியில் இதுவரை இடம் கிடைத்ததில்லை. ஏனெனில் அஷ்வின் சிறப்பாக பந்துவீசி வருவதால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.

தற்போது ரஞ்சி போட்டிகளில் விளையாடி வரும் சாஹல், சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்திய  அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தனது நீண்டநாள் கனவு என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் அஷ்வின்-ஜடேஜா போன்றோர் கடந்த 8 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் சிறப்பாக ஆடி வருகின்றனர். அவர்களது இடத்தை சாதாரணமாக பிடித்துவிட முடியாது. அடுத்தாண்டு நடைபெற உள்ள உலக்கோப்பைக்கான அணியில் இடம்பெறுவேன் என நம்பிக்கை உள்ளது. ஏனெனில் கடந்தாண்டு நடைபெற்ற தொடர்களில் நானும் குலதீப்பும் சிறப்பாக பந்துவீசினோம், சில போட்டிகளில் அணியின் வெற்றிக்கு எங்களது பந்துவீச்சு உதவியது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: