104வது பிறந்தநாளில் கவுரவம் கூகுள் டூடுலில் பாபா ஆம்தே

புதுடெல்லி: சமூக ஆர்வலர் பாபா ஆம்தேவின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு  கூகுள் தனது டூடுலில் அவரது படத்தை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 1914ம் ஆண்டு பிறந்தவர் முரளிதர் தேவிதாஸ் ஆம்தே. செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்த இவர், தனது இளம் வயதில் ஆடம்பரமாக இருந்தார். விலங்குகளை வேட்டையாடுவது, சொகுசு  கார்களை வாங்கி மகிழ்வது இவரது பொழுதுபோக்காக இருந்தது. பின்னர், சட்டம் படித்த இவர் தனது 20 வயதில் சொந்தமாக நிறுவனத்தை தொடங்கினார். அப்போது, இவரது வாழ்க்கையை ஒரு ெதாழுநோயாளி புரட்டிப்  போட்டார்.

சாலையில் சென்று கொண்டிருந்த ஆம்தே, தொழுநோயாளி ஒருவர் வலியால் துடிப்பதை பார்த்தார். இந்த காட்சி அவருடைய மனதை வேதனைப்படுத்தியது. அவரை மீட்டு உதவி செய்ததோடு, தங்குவதற்கும் இடம் ஏற்பாடு  செய்தார். பின்னர், தொழுநோயாளிகளுக்கு உதவும் எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தொழுநோயாளிகளுக்காக சேவை செய்வதில் தன்னை அர்ப்பணித்து கொண்டார். பிற்காலத்தில் அவர், ‘பாபா ஆம்தே’ என  மக்களால் அழைக்கப்பட்டார். தொழு நோயாளிகளின் சிகிச்சை, மறுவாழ்வுக்காக 3 ஆசிரமங்களை நிறுவினார். பத்ம, காந்தி அமைதி பரிசு உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். இவர் 2008ம் ஆண்டு, தனது 93வது  வயதில் இறந்தார். இவருடைய 104வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு கூகுள் நிறுவனம் தனது டூடுலில் பாபா ஆம்தேவின் படத்தை வைத்து கவுரவுப்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: