×

ஆசிரியர் போராட்டம் முதல்வர் பேச்சு நடத்த வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ஊதிய முரண்பாட்டை களைய போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் மயங்கி விழுந்து மருத்துவமனைகளில்  சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் தமிழக அரசு மனம் இரங்கவில்லை. கடந்த ஆண்டும் இது போல ஆசிரியர்கள் மயங்கி விழுந்த சம்பவங்களும் நடந்தது. இந்த ஆசிரியர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதால் அவர்களின்  ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதை களைய வேண்டியது அரசின் கடமை. எனவே முதல்வர் அழைத்துப் பேசி ஆசிரியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK , Jayalalithaa's death
× RELATED நாட்டிலேயே பாஜக ஆளும் மாநிலங்களில்...