×

ஊதிய முரண்பாடுகளை நீக்கக் கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்து பேச வேண்டும்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:ஊதிய முரண்பாடுகளை நீக்க வலியுறுத்தி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக முதல்வர் அழைத்துப் பேசி, சுமுக தீர்வு காண வேண்டுமென்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இது குறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து, ஊதிய முரண்பாடு களை நீக்க வேண்டும் என்று 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதை அதிமுக அரசு  வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 2009 ஜூன் மாதத்திற்கு முன்பு நியமிக்கப்பட்டவர்களுக்கும் அதன் பிறகு வேலைக்குச் சேர்ந்தவர்களுக்கும் ₹ 3,770 சம்பள வித்தியாசம் இருக்கிறது என்ற பிரச்னையை  இடை நிலை ஆசிரியர்களின் பல்வேறு  போராட்டங்களுக்குப் பிறகும் அதை நியாயமான முறையில் தீர்க்க எண்ணாமல் அரசு உதாசீனப்படுத்துவது மிகுந்த வேதனைக்குரியது. அறவழியில் அமைதியாகப் போராடும் அரசு ஆசிரியர்களை அழைத்துப் பேசுகிறேன் என்று உறுதியளித்து நம்ப வைத்து விட்டு, பிறகு அவர்களை ஏமாற்றி இருக்கும் முதல்வரின் பிழையான செயல் ஒரு முதல்வருக்கு உள்ள  நற்பண்பு அல்ல. பெண்கள் அதிக எண்ணிக்கையில் இந்த தொடர் போராட்டத்திலும் உண்ணாவிரதத்திலும் தங்க ளின் உயிரைத் துச்சமென நினைத்துப் போராடி, பல ஆசிரியர்கள் மயக்கமடைந்து இருக்கும் உயிருக்கு ஆபத்தான  இந்த நிலையிலும் அதிமுக அரசு சம்பந்தம் இல்லா ததைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது விபரீதமானது, மன்னிக்க முடியாதது.

தங்களின் ஒற்றை கோரிக்கைக்காக மனஉறுதியுடன் போராடிக் கொண்டிருப்பதை நான் நேரில் பார்த்த போது, அதிமுக அரசுக்கு சிறிதளவு கூட மனிதாபிமானமோ மனிதஉயிரைப் பற்றிய சரியான மதிப்பீடோ இல்லை என்பதை  உணர்ந்தேன். ஜனநாயக ரீதியிலான இதுபோன்ற போராட்டங்களை முறையான பேச்சுவார்த்தைக ளின் மூலம் நேர்மையான தீர்வு காண்பதைப்பற்றிச் சிந்திக்காமல் அறவே புறக்கணி க்கும் இந்த அரசின் ஆசிரியர் விரோத நிலைப்பாடு அரசு  நிர்வாகத்தில் பின்னடைவு விளைவுகளை ஏற்படுத்தி விடும். ஆகவே முதல்வர் பழனிசாமி இந்தப் பிரச்னையில் எந்த கவுவரமும் கருதாமல் உடன டியாக நேரடியாகத் தலையிட்டு, போராடும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசி அவர்களின் ஊதிய முரண்பாட்டினை அகற்ற  வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். உயிருக்கு ஊறு நேர்ந்திடும் நிலையில், ஆண் பெண் இடைநிலை ஆசிரியர்கள் தீர்மான மாகப் போராடிக் கொண்டிருப்பதால், தாமதப்படுத்தாமல் இப்பிரச்னையில் உடனே தலையிட வேண்டும் என முதல்வரை  வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : teachers ,removal ,MK Stalin , Fighting, removal, wage contradictions,MK Stalin's
× RELATED அரசு உத்தரவை மீறி பள்ளிகளில் சிறப்பு...