×

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய நம்பர் 1 தென் ஆப்பிரிக்க பவுலர்: டேல் ஸ்டெய்ன் புதிய சாதனை

சென்சுரியன்: டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளராக டேல் ஸ்டெய்ன் சாதனை படைத்துள்ளார். சென்சுரியன் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டேல் ஸ்டெய்ன் இந்த சாதனையை நிகழ்த்தினார். டேல் ஸ்டெய்ன் 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 421 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இந்நிலையில் இன்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியின் 7-வது ஓவரில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகர் ஜமானின் விக்கெட்டை வீழ்த்தி 422 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷான் போலாக் சாதனையை முறியடித்தார். இதன் மூலம் டேல் ஸ்டெயின் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய தென் ஆப்பிரிக்காவின் நம்பர் 1 பந்துவீச்சாளரானார்.

முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷான் போலாக் 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 421 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்து இருந்தார். இதனை டேல் ஸ்டெய்ன் வெறும் 88 டெஸ்ட் போட்டிகளில் சமன் செய்திருந்தார். தற்போது தனது 89-வது டெஸ்ட் போட்டியில் போலாக்கின் சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சாளரானார். முன்னதாக போலாக்கின் சாதனையை முறியடிக்க 5 விக்கெட்டுகளே இருந்த போது 2016-ல் நடந்த  ஆஸ்திரேலியா தொடரின் போது, தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன் விலகினார். அதன்பின்பு அவரால் முன்பு போல பந்து வீச முடியவில்லை. தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பலரும் ஸ்டெய்னின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என பேசத் தொடங்கினர். ஆனால் தனது கடின உழைப்பால் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்காக களமிறங்கி இந்த சாதனையை டேல் ஸ்டெய்ன் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : South African ,batsman ,Dale Steyn , South Africa,bowler,Test cricket,most wicket,Dale Steyn,new record
× RELATED சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின்...