×

பாலக்கோடு அருகே தாமரை ஏரியை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

பாலக்கோடு : பாலக்கோடு அருகே கிடப்பில் போடப்பட்டஜெர்த்தலாவ், தாமரை ஏரியை தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும்  என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்கோடு விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கியது, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜெர்த்தலாவ்ஏரி, தாமரை ஏரியாக இருந்தது. இந்த ஏரியின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் சுமார் 5ஆயிரத்திற்கு மேற்பட்ட ஹெக்டர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், மாவட்ட நிர்வாகம் குடிபராமத்து பணிகள் மூலம், 2ஏரிகளும் தூர்வார சுமார் ₹80.35லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டது.

இதையாடுத்து 2 ஏரிகளிலும் சீமைகருவேல மரங்களை அகற்றியும், வலது கால்வாய், இடது கால்வாய் பராமரிப்பு பணிகளும், ஏரிக்கரையை பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள இருந்தது. ஆனால் பணிகளை கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீர் ஆதாரங்களை பெருக்க, மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட தொகை ஒதுக்கியும், ஏரிகளை தூர்வாரததால் விவசாயிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வரும் மழை பருவங்களில் தண்ணீர் சேமிக்க முடியாமல் விசாயம் பொய்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வகத்தினர் ஏரியை தூர்வாரும் பணியை துரிதப்படுத்த வேண்டும்  என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Farmer farmers ,Lotus lake ,Balakode , Balakode,Lotus lake,Farmer
× RELATED முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்