×

திருப்பூரில் கிளி ஜோதிடர் வெட்டிக்கொலை: கொலையாளியை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

திருப்பூர்:திருப்பூர்  மங்கலம் பாரதி நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற குமார் (35). கிளி ஜோதிடர். இவர் நேற்று முன்தினம் மதியம் திருப்பூர் பின்னி சாலையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த வாலிபர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு பைக்கில் ஏறி தப்பினார். வடக்கு போலீசார் வழக்குப்பதிந்து, அங்கிருந்த  நிறுவனங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்து, கொலையாளி குறித்து  விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கொலை செய்வதற்கு சற்று நேரம் முன் துண்டு பிரசுரம் ஒன்றை அப்பகுதி பொதுமக்களுக்கு கொலையாளி வினியோகித்துள்ளார். தனது காதலியை பிரித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் குமாரை கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கொலையாளியை  பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் தென்னரசு, பிச்சையா  தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொலையாளியையும், அவரது  காதலியையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : organization ,Kilu Jyothi Chitra ,Tirupur , Parrot, wicker, killer, individually
× RELATED இயர் பட்ஸ், ஹெட் போன்களின் அபரிவிதமான...