×

அன்புமணி குற்றச்சாட்டு ஸ்டெர்லைட் அனுமதிக்கு கோடிக்கணக்கில் லஞ்சம்

கோபால்பட்டி:  கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். திண்டுக்கல் மாவட்டம்,  கொசவபட்டி புனித ஞானப்பிரகாசியார் தேவலாயத்தில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி சிறப்பு திருப்பலி நேற்று நடைபெற்றது. இதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கலந்து கொண்டார்.  பின்னர் அவர் அளித்த பேட்டி:  உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 8 ஆயிரம் கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த அரசை கலைத்து உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம். உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கஜா புயலில் மீட்புப்பணி தாமதமடைந்துள்ளது. இதனை பயன்படுத்தி அரசு அலுவலர்கள் அதிகளவில் ஊழலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக மக்களுக்கு எதிரான நீட் தேர்வு, ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்டவைகள் தேவையில்லை. மத்திய அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்க வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ்க்கு அனுமதி அளித்தது வரவேற்கத்தக்கது. கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்று கொண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் பாமக கூட்டணி குறித்து வதந்திகள் பரவுகின்றன.  தேர்தல் தேதி அறிவித்தபின் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMRC , Dear, sterile, bribery
× RELATED நடவடிக்கையை துரிதப்படுத்த கோரிக்கை...