×

நாக்பூரில் இருந்து தீவிரவாத செயல்களுக்கு கடத்தல்? பாலக்காட்டில் 4.2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

திருவனந்தபுரம்: நாக்பூரில் இருந்து நெல்லை வழியாக பழ லாரியில் மறைத்து வைத்து கடத்திய 4.2 டன் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் பியூஸ் வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் இருந்து ேகரள மாநிலம் பாலக்காடு வழியாக லாரிகளில் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் கடத்தப்படுவதாக பலாக்காடு தனிப்பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பாலக்காடு கல்லடிக்கோடு போலீசார் பாலக்காடு - மன்னார்காடு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ேசாதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அதில், பழப்பெட்டிகள் இருந்தன. ஆனால் போலீசார் தீவிர சோதனை செய்தபோது பழப்பெட்டிகளின் அடியில் தார்ப்பாய் விரிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடியில் மேலும் ஏராளமான பெட்டிகள் இருந்தன. அவற்றை பரிசோதனை செய்தபோது 168 பெட்டிகளில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ெஜலட்டின் குச்சிகள், 12 பெட்டிகளில் 48 கட்டு பியூஸ் வயர்களும் இருந்தன. இதையடுத்து, 4.2 டன் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் பியூஸ் வயர்களை கைப்பற்றிய போலீசார் லாரியில் இருந்த 2 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நெல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியுள்ள சுசாந்திர குமார் (31), ஆனந்தஜோதி (26) என தெரியவந்தது.

அவர்கள் வெடிப்பொருட்களை மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி பகுதிக்கு கொண்டு செல்வதாகவும், அங்கு ஒரு பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்தினால் வேறு ஒரு லாரி தயாராக இருக்கும் என்றும் தங்களிடம் வெடிப்பொருட்களை ஒப்படைத்தவர்கள் கூறியதாக போலீசில் தெரிவித்தனர். இந்த வெடிப்பொருட்களை நாக்பூரில் இருந்து நெல்லை வழியாக மஞ்சேரிக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். பெரும்பாலும் கல்குவாரிகளில் இந்த ெஜலட்டின் வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்படும். ஆனால் அளவுக்கு அதிகமாக கொண்டு ெசல்ல முயன்றதால், அவை தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nagpur , Nellai, gelatin sticks, bees wiresநெல்லை,ஜெலட்டின் குச்சிகள்,பியூஸ் வயர்கள்
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...