×

யவத்மால் அருகே கோர விபத்து டேங்கர் லாரி மீது ஜீப் மோதி 9 பேர் பலி: 7 பேர் படுகாயம்

யவத்மால்: எரிவாயு ஏற்றிச் சென்ற டேங் கர் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில், ஜீப்பில் இருந்த 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவின் யவத்மால் மாவட்டம், கலம்ப் தாலுகாவில் உள்ள வாஹாபூர் என்ற கிராமத்தை சேர்ந்த காம்ப்ளே என்பவரின் இல்லத்தில் நடந்த திருமண நிச்சயதார்த்த விழாவில், பர்தி மற்றும் சபர்பாடா ஆகிய கிராமங்களை சேர்ந்த இரு குடும்பத்தினர் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த விழா முடிந்த பிறகு அந்த இரு குடும்பத்தினரும் தாங்கள் வந்த ஜீப்பில் சொந்த ஊருக்கு திரும்பினர். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் யவத்மால்-கலம்ப் நெடுஞ்சாலையில் ஜீப் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் இருந்து எரிவாயு ஏற்றிய இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு சொந்தமான டேங்கர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

இதற்கிடையே, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே பலியானார்கள். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிவு ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீயணைப்பு படையினர் மேற்கொண்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nine ,crash ,Yavatmal , Yavatmal, Tanker Larry, Jeep, 9 dead and seven injured
× RELATED காளான் சாப்பிட்ட 3 பேர் பரிதாப பலி: மேலும் ஒன்பது பேர் அட்மிட்