×

ஆப்கன் அரசு அலுவலகத்தில் தற்கொலை படை தாக்குதல் 43 பேர் பரிதாப சாவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசு அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் பலி  எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதி பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த  பகுதியாகும். வீரர்களுக்கு பென்ஷன் மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் அலுலவகத்தில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பொதுமக்கள்  கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது திடீரென அலுவலக வளாகத்திற்குள் கார் ஒன்று நுழைந்தது. அதில் இருந்த தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த  வெடிகுண்டுகளை வெடிக்கச் வைத்து தாக்குதல் நடத்தினான். இதில் கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அருகில் இருந்த  ஏராளமானவர்கள் காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டபடியே சிதறி ஓடினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி  உள்ளே நுழைந்த மற்ற தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு  படையினர் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.தற்கொலை படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 19 என்று கூறப்பட்ட நிலையில், அது  நேற்று 43 ஆக உயர்ந்தது. மேலும் 10 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.  பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையில், 4 தீவிரவாதிகள்  கொல்லப்பட்டனர். மேலும், பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicide attack ,Afghan , A suicide, bomb,Afghan government,
× RELATED தீவிரவாத தாக்குதலுக்கு மத்தியில்...