×

சிரியா மற்றும் ஏமனில் அமைதி நிலவ வேண்டும்: போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

வாடிகன்: போரினால் பல்வேறு துயரங்களை எதிர்கொண்டுள்ள சிரியா மற்றும் ஏமனில் அமைதி நிலவ வேண்டும் என்று போப் பிரான்சிஸ் விருப்பம்  தெரிவித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் சிட்டியில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் போப் உரையாற்றுவது வழக்கம்.  இந்த ஆண்டும் போப் பிரான்சிஸ் வழக்கமான பிரார்த்தனையை தொடர்ந்து, உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:மகிழ்ச்சியான இந்த கிறிஸ்துமஸ் நாளில் அனைவரிடத்திலும் சகோதரத்துவம் வளரவேண்டும் என்பது எனது வாழ்த்தாகும். ஒவ்வொரு நாட்டின்  தனிமனிதர்கள் மற்றும் கலாச்சாரத்தில் சகோதரத்துவம் பரவவேண்டும். பல்வேறு கருத்துக்கள் கொண்ட மக்களிடையேயும், பல்வேறு  மதங்களை சேர்ந்தவர்களிடையேயும் சகோதரத்துவம் வளரவேண்டும்.

10 ஆயிரம் பேரை பலிகொண்ட ஏமன் உள்நாட்டு போர் முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன். எனது எண்ணங்கள் ஏமன் மீது திரும்புகிறது.  சர்வதேச சமூகத்தினால் இந்த போர் முடிவுக்கு வருவதோடு, இறுதியாக போரினாலும், பஞ்சத்தினாலும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும்  மக்களுக்கு அதில் இருந்து விடுதலை கிடைக்கவேண்டும். சர்வதேச சமூகம் ஒரு அரசியல் தீர்வுக்காக உறுதியுடன் செயல்பட வேண்டும். இதனால்  சிரியா மக்கள் குறிப்பாக தங்களது சொந்த நாட்டைவிட்டு அகதிகளாக வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்தநாட்டுக்கு திரும்பி  அமைதியுடன் வாழமுடியும். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்களிடையே மீண்டும் புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை  கொண்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Syria ,Yemen ,Pope Francis , Peace,Syria, Yemen,Pope Francis urges
× RELATED அமெரிக்க டிரோனை ஹவுதி படையினர் சுட்டு வீழ்த்தினர்