×

2017ல் மோசமான ஆடுகளம்...

கடந்த ஆண்டு மெல்போர்னில் நடந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் மிக மோசமாக அமைந்திருந்ததாக ஐசிசி சான்றளித்தது. எனவே  இம்முறை பந்துவீச்சு மற்றும் பேட்டிங்குக்கு சம விகிதத்தில் ஒத்துழைக்கும் ஆடுகளத்தை அமைக்க பராமரிப்பாளர்கள் மிகுந்த கவனம் செலுத்தி  உள்ளனர். மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில், வார இறுதி நாட்களில் ஆஸ்திரேலிய ரக்பி கால்பந்து போட்டிகள் நடைபெறுவது வழக்கம்  என்பதால் நிரந்தர பிட்ச் அமைக்கப்படுவது இல்லை. ஸ்டேடியத்துக்கு வெளியே பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மிகக் கவனமாக  தயாராகும் பிட்ச்கள், கிரிக்கெட் போட்டி நடப்பதற்கு சில தினங்களுக்கு முன் பிரமாண்ட டிரக்குகளில் ஏற்றப்பட்டு அவற்றை அப்படியே ‘ரெடிமேட்’  ஆக மைதானத்துக்குள் கொண்டு வந்து பதித்து பராமரிக்கிறார்கள்.

 ஆடுகளத்தில் இம்முறை ஓரளவு புற்கள் விட்டு வைக்கப்பட்டிருந்தாலும்  வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்குமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள். காரணம், மெல்போர்னில் தொடர்ந்து 4 நாட்களுக்கு வறண்ட  வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், ஆடுகளம் உலர்ந்து போய்விடுவதுடன் பந்து அதிகம் பவுன்ஸ் ஆகாமல் முழங்காலுக்கு  கீழாகவே வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பிட்ச் ரன் குவிப்புக்கே அதிகமாக ஒத்துழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pitch , The,worst,pitch , 2017 ...
× RELATED மீண்டும் ஆடுகளம் திரும்பும் ஐரோப்பிய கால்பந்து போட்டிகள்