×

ஜார்க்கண்டில் ரூ.2.81 லட்சம் கோடியில் இரும்பு ஆலை அமைக்கிறது வேதாந்தா நிறுவனம்

கொல்கத்தா: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ₹2 லட்சத்து 81 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய இரும்பாலை ஒன்றை வேதாந்தா நிறுவனம் அமைக்கிறது.தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பு குற்றச்சாட்டால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனம் வேதாந்தா குழுமம். இதன் தலைவர் அனில் அகர்வால் கொல்கத்தாவில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: வேதாந்தா நிறுவனம் ஜார்க்கண்ட் மாநிலம் பொகாராவில் புதிதாக வாங்கியுள்ள எலக்ட்ரோ ஸ்டீல் நிறுவனத்தின் மூலம் புதிய இரும்பு எஃகு ஆலை ஒன்றை  அமைக்க முடிவு செய்துள்ளது. ₹2 லட்சத்து 81 ஆயிரம் கோடி (4 பில்லியன்) திட்டமதிப்பில் இந்த திட்டம் உருவாக்கப்படுகிறது. இதன் மூலம்  ஆண்டுக்கு 4.5 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்படும். இதற்காக வேதாந்தா நிறுவனம் தொடக்கத்தில் 300 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை  ஒதுக்கீடு செய்கிறது.

பொகாராவில் ஏற்கனவே செயல்பட்டு வரும் இரும்பாலையில் 1.5 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக 2.5  மில்லியன் டன் உற்பத்தி செய்யும் அளவில் திறன் அதிகரிக்கப்படும். இதன் மூலம் 1.20 லட்சம் பேர் நேர்முகமாகவும் மறைமுகமாகவும்  வேலைவாய்ப்பு பெறுவார்கள். இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vedanta ,plant ,Jharkhand , Vedanta ,steel plant, Jharkhand ,Rs 2.81 lakh crore
× RELATED கூடங்குளம் முதலாவது அணுமின்...