×

பேஸ்புக் நட்பால் உல்லாசம் : வாலிபரால் பாதிக்கப்பட்ட பெண் வேலூர் கலெக்டர் ஆபீசில் தர்ணா

வேலூர்: பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பால் கர்ப்பை பறிகொடுத்த பெண், வாலிபரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவர் நர்சிங் படித்துள்ளார். நேற்று மாலை வேலூர் எஸ்பி அலுவலகத்தில்  இளம்பெண் ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘எனக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் பணிபுரியும் காட்பாடி அடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்த மனோஜ்குமார்(30) என்பவருடன் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டது. இதன்பிறகு இருவரும் காதலித்து வந்தோம். 2 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் இருந்து வந்த மனோஜ்குமார், திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதன்பிறகு என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது திருமணத்துக்கு மறுத்து விட்டார்.

இதுபற்றி விசாரித்தபோது ஏற்கனவே அவருக்கு திருமணமானதை என்னிடம் மறைத்துள்ளார். என்னை ஏமாற்றிய மனோஜ்குமார், தற்போது சிங்கப்பூருக்கு செல்ல உள்ளார். எனவே அவரை சிங்கப்பூருக்கு செல்லாதபடி தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.இதன் அடிப்படையில், வாணியம்பாடி போலீசாருக்கு உத்தரவிடுவதாக எஸ்பி அலுவலக போலீசார் தெரிவித்தனர். ஆனால் இதை ஏற்காத இளம்பெண், வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று தர்ணாவில் ஈடுபட்டார். இதுபற்றி தகவலறிந்த கலெக்டர் அலுவலக அதிகாரிகள் மற்றும் சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் போலீசார் அங்குவந்து பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த பெண், ‘என்னை காதலித்து ஏமாற்றியவர் சிங்கப்பூருக்கு செல்வதற்கு முன்பு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், தர்ணா போராட்டத்தை கைவிட மாட்டேன். நான் விஷம் குடித்துவிட்டு வந்துள்ளேன். நடவடிக்கை எடுக்காவிட்டால், இங்கேயே உயிரை விடுவேன்’ என்றார்.இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போலீசார் உடனடியாக இளம்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்த பெண், ‘நான் விஷம் குடிக்கவில்லை’ என்றார். இருப்பினும் இளம்பெண்ணை வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இளம்பெண்ணை ஏமாற்றிய மனோஜ்குமாரை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Girlfriends ,Office ,Vellore Collector , Facebook, fun, female impact
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...