×

ஊழல் வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு: பாக். முன்னாள் பிரதமர் நவாசுக்கு 7 ஆண்டு சிறை: மற்றொரு வழக்கில் விடுதலை

இஸ்லாமாபாத்: இரும்பு ஆலை ஊழல் வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர் நவாஸ் ஷெரீப். பனாமா பேப்பர்ஸ் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நவாஸ், உச்ச நீதிமன்ற உத்தரவால் கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது அல் அஜிஸா இரும்பு ஆலை, அவன்பீல்ட் பிராப்பர்டீஸ், பிளாக்சிப் முதலீடு ஆகிய 3 ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.

இதில், அவன்பீல்ட் பிராப்பர்டீஸ் வழக்கில், ஊழல் பணத்தில் நவாஸ் லண்டனில் 4 சொகுசு பங்களாக்கள் வாங்கியது நிரூபணமானது.இதைத்தொடர்ந்து அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், மருமகன் கேப்டன் சப்தாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. லண்டனில் இருந்து நாடு கடத்தப்பட்ட நவாஸ், மரியம் உள்ளிட்டோர் ராவல்பிண்டி அடிலா சிறையில் அடைக்கப்பட்டனர். மீதமுள்ள 2 வழக்கில் டிசம்பர் 24ம் தேதிக்குள் தீர்ப்பு வழங்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்நிலையில், 2 ஊழல் வழக்கில், ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி மாலிக் நேற்று தீர்ப்பளித்தார். அதில், இரும்பு ஆலை வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபணமானதால் நவாசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.17.5 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றொரு வழக்கில் விடுவிக்கப்பட்டார். தீர்ப்பையொட்டி நவாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தீர்ப்பு அறிவித்த உடனேயே அவர் பலத்த காவலுடன் சிறைக்கு அழைத்து் செல்லப்பட்டார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nawaz ,Pak , Corruption scandal, 7 year prison, release, former prime minister Nawaz Sharif
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு