×

பிக் பாஷ் டி20 லீக்: சிக்சர்சை வீழ்த்தியது தண்டர்

சிட்னி: ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், சிட்னி தண்டர் அணி 21 ரன் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தியது. சிட்னியில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற சிக்சர்ஸ் முதலில் பந்துவீசியது. சிட்னி தண்டர் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 63 ரன் (37 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். கேப்டன் ஷேன் வாட்சன் 19, பெர்குசன் 23, டேனியல் சாம்ஸ் 28, ஜொனாதன் குக் 12* ரன் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய சிட்னி சிக்சர்ஸ் 9 ஓவரில் 56 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில் டாம் கரன் - ஷான் அபாட் ஜோடி 7வது விக்கெட்டுக்கு உறுதியுடன் போராடி 88 ரன் சேர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த கரன் 62 ரன் (40 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), அபாட் 35 ரன்னில் வெளியேற சிக்சர்ஸ் போராட்டம் முடிவுக்கு வந்தது.
அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தண்டர் பந்துவீச்சில் டேனியல் சாம்ஸ், பவாத் அகமது தலா 3 விக்கெட், குக், ரெய்ன்பேர்டு, கிரீன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஜோஸ் பட்லர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். சிட்னி தண்டர் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. அந்த அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Big Bash T20 ,Sydney Thunder
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...