×

‘மன்மதன்’ படத்தின் டப்பிங் உரிமம் வழங்குவதில் சிக்கல்: தயாரிப்பாளர் மீது நடிகர் டி.ராஜேந்தர் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: மன்மதன், வல்லவன் திரைப்படத்தின் இந்தி டப்பிங் உரிமம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் தேனப்பன் மீது நடிகர் டி.ராஜேந்தர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான டி.ராஜேந்தர்,   போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்  நேற்று புகார் ஒன்று அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:  எனது மகன் சிம்பு நடித்த ‘மன்மதன், வல்லவன்’ ஆகிய இரண்டு திரைப்படத்தின் கதை முழுவதும் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. தமிழில் எடுக்கப்பட்ட மன்மதன் திரைப்படம் இந்தியில் எனது மகன் சிம்பு வைத்து எடுக்க நான் முடிவு செய்தேன். ஆனால் தமிழ் படங்களில் அவர் பிசியாக இருப்பதால் மன்மதன் திரைப்படத்தின் இந்தி மற்றும் வடமாநில மொழிகளின் டப்பிங் உரிமையை விற்பனை ெசய்ய முடிவு செய்தோம்.

ஆனால், எனது சகோதரர் தேனப்பன் மற்றும் எஸ்.என்.மீடியா உரிமையாளர் சஞ்சய்குமார் லால்வானி ஆகியோர் மன்மதன் மற்றும் வல்லவன் படங்களின் டப்பிங் உரிமை சம்பந்தமாக கலப்படமற்ற பொய்யையும், உண்மைக்கு புறம்பான தகவல்களை மும்பையில் வெளிவரும் பத்திரிகையில் விளம்பரம் செய்துள்ளனர். இது தொடர்பாக நான் மன்மதன் மற்றும் வல்லவன் திரைப்படத்தின் கதை தொடர்பான சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின் அனைத்து ஆதாரங்களையும் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனுவாக கொடுத்துள்ளேன். எனவே சம்பந்தப்பட்ட இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Producer ,Manmadhan': Actor D. Rajender , Problem , dubbing,'Manmadhan':, Actor D. Rajender's
× RELATED பகலில் வெயில் கொளுத்துகிறது;...