×

ஏற்றுமதியாளர் பிரச்னை தீர்க்க அமைச்சர் உறுதி

புதுடெல்லி: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது: ஏற்றுமதிக்கு தோல், ஜவுளி துறைகள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்த துறைகளின் பிரச்னைகள் தீர சலுகை திட்டம் பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.கடன் உதவி பெறுவது இவற்றுக்கு சவாலாக உள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னரிடம் விளக்க இருக்கிறேன். ஏற்றுமதி துறையினருக்கு முன்னுரிமை கடன் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதுபோல் ஜிஎஸ்டி ரீபண்ட் சிக்கலுக்கும் தீர்வு காணப்படும். இ-வாலட் இருந்தால் அவர்கள் வரியை முதலிலேயே செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister , Exporter,problem, Minister, confirmed
× RELATED 40க்கு 40 என்ற சபதத்தை முதல்வர்...