×

கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான நிதி எப்படி செலவிடப்பட்டது?

மதுரை: நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான நிதி எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து கலெக்டர்கள் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த வக்கீல் அருண்நிதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:  மதுரை மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளும், நீர்வழித் தடங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால், தண்ணீரை தேக்க  முடியவில்லை. நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து கொண்டே போகிறது. இந்த நிலை நீடித்தால் மாவட்டம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். எனவே, மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள், நீர்வழித் தடங்களிலுள்ள  ஆக்கிரமிப்பை அகற்றவும், தூர்வாரி தண்ணீரை தேக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், ‘நீர் நிலைகளில் பட்டா வழங்க கூடாது.  பாரபட்சமின்றி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். இனிவரும் காலங்களில் மீன் வளர்ப்பு குத்தகை விடக்கூடாது’ என பல்ேவறு உத்தரவுகளை பிறப்பித்தனர். இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் வீடியோ கான்பரன்சிங்கில் விசாரித்தனர். மதுரை மாநகராட்சி தரப்பில், ‘கால்வாயில் கழிவுநீர் கலப்பது 95% தடுக்கப்பட்டது’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், ‘‘தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஏதேனும் நிதி பெறப்பட்டதா? அந்த  நிதி எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்து கலெக்டர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,’’ என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : watercourse upgrading watersheds ,collectors , Collectors , report,funding, water ,resources?
× RELATED தோல்வி பயத்தில் 150 கலெக்டர்களை அமித்ஷா...