×

திருவில்லிபுத்தூரில் முத்தரசன் பேட்டி பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை மு.க.ஸ்டாலின் அறிவித்தது தவறல்ல

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி:உச்சநீதிமன்ற நிபந்தனைகளால், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலையிழந்த நாட்களுக்கு, தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண,  அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம். கஜா புயல் நிவாரணப் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மாறி, மாறி குற்றம்சாட்டி  வருகின்றன.தமிழக மீனவர்களை அந்நிய தேசத்தவர்களைப் போல மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு, பொறுப்பேற்று அதிமுக அரசு பதவி விலகவேண்டும். மத்திய அரசின்  தூண்டுதலால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

25 குழந்தைகளுக்கு கீழ் உள்ள 8 ஆயிரம்  அங்கன்வாடி மையங்கள் மூடப்படும் என சமூக நலத்துறை ஆணையர் அறிவித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் ஒரு அணியாக செயல்படுகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுலை, பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது  தவறில்லை. நாங்களும் எங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம். பிரதமர் மோடி தமிழகம் வரும்போது மக்களே எதிர்ப்பு தெரிவித்து, அவரை திரும்பி போகச் சொல்வார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,announcement ,Rahul Gandhi ,candidate ,Muvattupuzha , Muthurasan, Srivilliputhur, Rahul Gandhi , prime ministerial
× RELATED அதிமுக உறுப்பினர்களை அவையில்...