×

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள் மாற்றம் புகார்களை விசாரிக்க அதிமுகவில் புதிய குழு

சென்னை: விழுப்புரம், திருவண்ணாமலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும், தொண்டர்களிடமிருந்து மனுக்களை பெற அமைச்சர் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் அடங்கிய  புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:  தொண்டர்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை பரிசீலித்து தெரிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கே.பி. முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், நத்தம்  விஸ்வநாதன், அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகிய 5 பேர் குழு அமைக்கப்படுகிறது.  அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி.சண்முகம், சேவூர் இராமச்சந்திரன் ஆகியோரும் எம்.ஜி.ஆர்.மன்ற  இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் க.பொன்னுசாமி. விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் டாக்டர் சு.லட்சுமணன் ஆகியோரும் தங்களின் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். விழுப்புரம் வடக்கு  மாவட்ட அதிமுக அமைப்புச் செயலாளராக டாக்டர் சு.லட்சுமணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைச் செயலாளராக பேராசிரியர் க.பொன்னுசாமி, விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக சி.வி.சண்முகம் ஆகியோர் புதிய  பொறுப்புகளில் நியமிக்கப்படுகிறார்கள்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மு.ராஜன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இப்பொறுப்புக்கு சேவூர் ராமச்சந்திரன் நியமிக்கப்படுகிறார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட  செயலாளராக தூசி  மு.மோகன் நியமிக்கப்படுகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அவைத் தலைவர் மு.அசோக்குமார், மாவட்ட செயலாளர் ஏ.கோவிந்தராஜ் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அவை தலைவராக சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட செயலாளராக மு. அசோக்குமார், மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் ஞ.பாலகிருஷ்ணா ரெட்டி நியமிக்கப்படுகிறார்கள். மேலும், கிழக்கு  மாவட்ட காவேரிப்பட்டினம் ஒன்றிய அதிமுக செயலாளர் பிரபாகரன் அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக கிருஷ்ணன் நியமிக்கப்படுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Villupuram ,committee ,Thiruvannamalai District Secretaries , Villupuram, Tiruvannamalai ,,Supreme Court,investigate complaints
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...