×

கோவை- டெல்லி நிஜாமுதின் கொங்கு அதிவிரைவு ரயில் நவீன வசதிகளுடன் இயக்கம்

கோவை: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரயில்வே சார்பில் உத்கிரிஷ்ட் திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் 66 ரயில்களின் பெட்டிகளின் உள்கட்டமைப்பை தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியையும் ரூ.60 லட்சம் செலவில் புதுப்பிக்க அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக சேலம் கோட்டத்தில் இயங்கும் கோவையில் இருந்து டெல்லி நிஜாமுதின் வரை செல்லும் கொங்கு அதிவிரைவு ரயில் 12647/12648 நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட பெட்டிகளுடன் கோவையில் இருந்த நேற்று இயக்கப்பட்டது.

இதை கோவை ரயில்வே மெக்கானிக்கல் பிரிவில் வரும் ஜனவரி மாதம் ஓய்வு பெறவுள்ள மூத்த தொழிலாளி பீட்டர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இந்த ரயில் பெட்டிகளில் எல்இடி விளக்குகள், பிளஷ்ஷிங் வால்வுகள், தானியங்கி டீ, காபி தயாரிக்கும் இயந்திரங்கள், வைபை வசதி உள்ளிட்ட பல கூடுதல் அம்சங்கள் உள்ளன. மேலும் ரயிலை அவ்வப்போது சுத்தம் செய்ய ரயிலில் பணியாளர்கள் உள்ளனர்.விழாவின் போது முதுநிலை கோட்ட ரயில்வே மெக்கானிக்கல் பொறியாளர் முகுந்தன், கோவை ரயில்வே ஸ்டேஷன் இயக்குனர் சதீஸ் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore-Delhi Nizamuddin ,Kongu Superfast Express , Coimbatore-Delhi, Nizamuddin Kongu superfast rail, modern facility
× RELATED ஆக்கிரமிப்புகளால் நிரம்பாத ஏரிகள்:...