×

பஹ்ரைனில் அடிமையாக இருந்த பெண் மீட்பு: இந்திய தூதரக அதிகாரிகளுக்கு சுஷ்மா சுவராஜ் பாராட்டு

டெல்லி: பஹ்ரைன் நாட்டில் கொத்தடிமையாக இருந்த இந்திய பெண்ணை மீட்டதற்காக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.இந்தியாவில் இருந்து வளைகுடா  நாடுகளுக்கு வேலை செய்வதற்காக செல்லும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் ஏஜென்டுகளால் வாக்குறுதி அளிக்கப்பட்ட வேலை கிடைக்காமல் மிக கடுமையான கூலி வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும்  முறையான சம்பளம், சரியான உணவு மற்றும் தங்கும் இடம் கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கு அவதிப்படுவதாக தெரிகிறது. வீட்டு வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து செல்லும் பல பெண்களும்  அங்கு சித்ரவதைப்படுகிறார்.

இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் வேலைக்காக இந்தியாவில் இருந்து சென்ற பெண்ணை அராபிய பணக்காரர் ஒருவர் தனது வீட்டில் கொத்தடிமையாக அடைத்து வைத்து, சித்ரவதை செய்வதாக அங்குள்ள தொண்டு  நிறுவனத்துக்கு சமீபத்தில் தகவல் வந்தது. இதனையடுத்து அவர்கள் பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதற்கிடையே அராபிய பணக்காரர் அந்த பெண்ணின் குடும்பத்தாடை தொலைபேசியில்  தொடர்புகொண்ட உங்கள் பெண்ணிடம் நான் அதிகப் பணத்தை கொடுத்திருக்கிறேன். இன்னும் 25 நாளாவது அவளை என்னுடன் வைத்திருப்பேன். அவளை மீட்க உங்களால் என்ன செய்ய முடியுமோ, செய்து கொள்ளுங்கள் என்று  சவால் விட்டார்.

இதுதொடர்பாக, பஹ்ரைன் நாட்டின் தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகளை தொடர்பு கொண்ட இந்திய தூதரக அதிகாரிகள் போலீசார் துணையுடன் அந்த அராபிய பணக்காரர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து அங்கு  கொத்தடிமை போல் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய பெண்ணை மீட்டனர். இதனையடுத்து விரைவாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டதற்காக இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மத்திய வெளியுறவுத்துறை சுஷ்மா  சுவராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த மீட்பு நடவடிக்கைக்கு உதவியாக இருந்த பஹ்ரைன் அரசு அதிகாரிகளுக்கு தனது சார்பில் நன்றி தெரிவிக்குமாறும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sushma Swaraj ,Indian Embassy ,Bahrain , Bahrain, slave, Indian woman, Indian embassy, Sushma Swaraj, congratulation
× RELATED புதுடெல்லி மக்களவை தொகுதி பாஜ...