×

பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நடைபெற்று வந்த விசாரணையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் உலக அளவிலான பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பெயர் அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் நவாஸ் ஷெரீப் மீதான விசாரணை நடைபெற்று வந்தது. அந்த ஊழல் வழக்கில் தற்போது 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

பாகிஸ்தானில் அடுத்தடுத்து பல்வேறு ஊழல் வழக்குகளில் நவாஸ் ஷெரீப் சிக்கி இருக்கின்றார். எனவே பனாமா ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் இருந்தன. தேசிய பொறுப்பாண்மை நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நடைபெற்று வந்தது. இதில் 2 வழக்குகளில் தற்போது அவர் மீதான தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. ஒரு வழக்கு அல்-திவ்யா ஸ்ட்ரீம்மிக்ஸ் என்ற நிறுவனம் சார்ந்த ஊழல் வழக்கில் நவாப் ஷெரீப் பெயர் இடம்பெற்றிருந்தது. அது தொடர்பான வழக்கில் அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இதுபோக கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் அளவிற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. முதலீடு தொடர்பான மற்றொரு ஊழல் வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருந்த நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் சிக்கியதால் பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. தற்போது அவருக்கு மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாகிஸ்தான் அரசில் மிகப்பெரிய திருப்பங்கள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nawaz Sharif ,Pakistani ,Panama ,jail , Pakistan, Nawaz Sharif, prison
× RELATED சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்