×

ஸ்டெர்லைட் விவகாரம் : உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு

ஸ்டெர்லைட் விவகாரத்தில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை, ஜன., 21 வரை தேசிய பசுமை தீர்ப்பாய அனுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் ஆலையை திறக்க அனுமதியளிக்க வேண்டும் என்றும் மனுவில் வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sterlite ,Supreme Court ,Vedanta Company ,High Court , Sterlite Plant, High Court Branch, Supreme Court, Vedanta Company
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...