×

கவனமாக இருங்கள்: எந்த நேரத்தில் நீங்கள் கொல்லப்படலாம்…ஒடிசா முதல்வருக்கு கொலை மிரட்டல் கடிதம்.!!!

புவனேஷ்வர்: ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வருகிறார்.இந்நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில், ‘துப்பாக்கிகளுடன் கூடிய அதிநவீன ஒப்பந்த கொலைகாரர்கள் உங்களை எந்த நேரத்திலும் தாக்கக்கூடும். சில ஒப்பந்தக் கொலைகாரர்கள் உங்களை கொலை செய்யலாம் என்பதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.இந்த ஒப்பந்த கொலைகாரர்கள் அதிநவீன ரக ஆயுதங்களான ஏகே 47 உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டவர்கள். ஏற்கெனவே உங்களைக் கொல்வதற்கான ஆயுதங்கள் ஏற்கெனவே வாங்கப்பட்டுவிட்டன. நீங்கள் எந்த நேரத்தில் கொல்லப்படலாம். அதனால், தயவுகூர்ந்து கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து முதல்வர் நவின் பட்நாயக்குக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடிதம் அனுப்பிய மர்மநபர் யார் என்பது குறித்து ஒடிசா போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். …

The post கவனமாக இருங்கள்: எந்த நேரத்தில் நீங்கள் கொல்லப்படலாம்…ஒடிசா முதல்வருக்கு கொலை மிரட்டல் கடிதம்.!!! appeared first on Dinakaran.

Tags : Odisha ,CM ,Bhubaneswar ,Chief Chief Chief ,Navin Patnayak ,Biju Janata ,
× RELATED பிளஸ்2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு...