×

பிக் பாஷ் டி20 லீக் அடிலெய்டை வீழ்த்தியது மெல்போர்ன்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஷ் டி20 தொடரின் லீக் ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் மோதிய மெல்போர்ன் ரெனகேட்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பந்துவீசியது. அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன் குவித்தது. வெதரால்டு 32, கேப்டன் இங்ராம் 21, மேத்யூ ஷார்ட் 65 ரன் (41 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்), ஜொனாதன் வெல்ஸ் 42 ரன் (30 பந்து, 4 பவுண்டரி) விளாசினர். அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணி 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன் குவித்து வெற்றியை வசப்படுத்தியது. ஹார்ப்பர் 28, கேமரான் ஒயிட் 32 ரன் எடுத்தனர்.
6வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடிய முகமது நபி - டேனியல் கிறிஸ்டியன் ஜோடி 94 ரன் சேர்த்தது. நபி 48 ரன் (30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ்டியன் 49 ரன்னுடன் (27 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். கிறிஸ்டியன் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மெல்போர்ன் அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Melbourne ,Big Bash T20 League Adelaide , Melbourne,defeated,Big Bash, T20 League
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை