×

இமயமலை ஆய்வுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும்: நாடாளுமன்ற குழு பரிந்துரை

புதுடெல்லி: இமயமலை சுற்றுச்சூழல் குறித்த விரிவான ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்ற மதிப்பீட்டு நிலைக்குழு தனது பரிந்துரை அறிக்கையில் கூறியுள்ளதாவது: இமயமலையில் கடந்த 40 ஆண்டுகளில் 13 சதவீத அளவுக்கு பனிப்பாறைகள் உருகிவிட்டன. இதன் காரணமாக 443 பில்லியன் டன் பனிக்கட்டிகள் மாயமாகியுள்ளது. தொடர்ந்து இமயமலையின் பனிப்பாறைகள் உருகி வருவது அபாய எச்சரிக்கை ஆகும். இதனை தடுப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பது அவசியமாகும். இதற்காக இமயலையில் சுற்றுலா நடவடிக்கைகளை முறைப்படுத்த வேண்டும். நிபுணர்களை கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் வகையில் கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இமயமலையை பாதுகாக்க சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிடம் இருந்து ஒத்துழைப்பை பெற வேண்டும். கிடைக்காதபட்சத்தில் குறைந்தபட்சம் இமயமலையுடன் தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுற்றுச்சூழல் சீரழிவுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற சுற்றுலா நடைமுறையாகும். சுற்றுலாவை மேம்படுத்த சாலைகள், ஆடம்பர வசதிகளை நிர்மாணிப்பதன் காரணமாக இமயமலைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிக சுற்றுலா பயணிகளின் வரத்து காரணமாக சாலைகள், வீடுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை மலைகளை வெட்டி அமைக்கப்படுகின்றது. இமயமலையின் நிலை குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தவும், நிலையான சுற்றுலா தேவைகளை அரசு ஏற்படுத்த வேண்டும். இமயமலையில் உள்ள பனிப்பாறைகள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளை குறைப்பதற்கான வழிகளை கண்டறியும் வகையில், சுற்றுச்சூழல் குறித்த விரிவான ஆய்வுக்காக அதிக நிதி ஒதுக்கீடு மற்றும் போதுமான உள்கட்டமைப்புக்களை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : inspection ,Himalayan , Allocate,more funds,Himalayan inspection, Parliamentary Committee
× RELATED பாஜகவின் இமலாய பொய்கள் சரிந்துவிட்டன: தேஜஸ்வி