×

மெரினாவுக்கு வந்த சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

சென்னை: மெரினாவுக்கு வந்த சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். சென்னை மேற்கு முகப்பேர் கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பெயின்டரான இவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு அருகில் வசிக்கும் சிறுமியுடன் ராதாகிருஷ்ணன் மகள் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த ராதாகிருஷ்ணனின் மனைவி, மகள் மிகவும் சோர்வுடனும், ஆடைகள் கிழிந்த நிலையிலும் இருப்பதை பார்த்து, என்ன பிரச்னை என்று கேட்டுள்ளார். அப்போது, மெரினாவில் இருக்கும் போது குதிரை ஓட்டும் அண்ணன் ஒருவர், குதிரையில் உட்காரவைத்து சவாரி ெசய்தார்.பிறகு என்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று 2 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். அதன் பிறகு என்னை மீண்டும் மெரினா கடற்கரைக்கு அழைத்து வந்து விட்டார் என்று கூறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது மெரினாவில் குதிரை சவாரி நடத்தும் வாலிபர்களில் ஒருவர் சிறுமி தனியாக மெரினாவுக்கு வந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கடத்தி ெசன்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சம்பவம் நடந்த இடம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் இந்த வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கை மயிலாப்பூர் போலீசாருக்கு மாற்றியுள்ளனர்.மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மயிலாப்பூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பாலியல் பலாத்காரம் செய்த மாஸ்டர் என்ற செல்வம் (24) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சிறுமியை குதிரை சவாரி நடத்தும் நபர் கடத்தி சென்று பலாத்காரம் செய்த சம்பவம் பெண்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Marina ,Boccas , Young girl , Marina arrested ,young man ,Boccas law
× RELATED புதிய ஒப்பந்ததாரரை நியமிக்கும் வரை...