உயர் மின்கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு எருமை, கழுதையிடம் மனு அளித்து விவசாயிகள் போராட்டம்

ஈரோடு:  விவசாய விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, எருமை, கழுதைகளிடம் விவசாயிகள் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் விவசாய விளை நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, நாமக்கல் திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களை உள்ளடக்கி 8 இடங்களில் கடந்த 17ம் தேதியில் இருந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு அடுத்துள்ள மூலக்கரையில் உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் 6வது நாள் போராட்டமாக நேற்று எருமை மாடுகளை அழைத்து வந்து, தங்களது மனுவை அளித்து கோஷங்களை எழுப்பினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளிப்பாளையத்தில் விவசாயிகள் வாயில் கருப்பு துணி கட்டியும், கழுதையிடம் மனு அளித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே,  வாழப்பாடியில் உடலில் இலைகளை கட்டிக்கொண்டு, வைக்கோலை சாப்பிட்டு விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதேபோல், பென்னாகரத்தில் உயர் மின்கோபுர பேனருக்கு பாடை கட்டி புதைக்கும் போராட்டம் நடந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: