×

வாயில் ஆசிட் ஊற்றி குழந்தையை கொன்றுவிட்டு விஞ்ஞானி மனைவி தற்கொலை : கோடம்பாக்கத்தில் பரிதாபம்

சென்னை: வாயில் ஆசிட் ஊற்றி குழந்தையை கொலை செய்து விட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோடம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் (36). இவரது மனைவி ரக்சிதா. தம்பதியின் 3 வயது மகன் ருத்ரா. இவர்கள், குடும்பத்துடன் கோடம்பாக்கத்தில் தங்கியிருந்தனர். சேத்துப்பட்டில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தில் தினேஷ் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல் தினேஷ் வேலைக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலை வீட்டிற்கு வந்த போது, கதவு உள்பக்கமாக தாழிட்டு இருந்தது. தினேஷ் நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.  அப்போது, வீட்டின் படுக்கை அறையில் அவரது மனைவி ரக்சிதா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். அவரது மகன் ருத்ரா முகம் வெந்த நிலையில் கட்டிலில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தினேஷ், இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்துக்கு  தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரக்சிதா மற்றும் குழந்தை ருத்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், ரக்சிதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர்தான் குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மேலும் மனநலம் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Scientist ,Kodambakkam , Scientist's wife, suicide
× RELATED பல நாடுகளுடன் ஒப்பிடும்போது...