×

ஏஞ்சல் வரிக்கு அடுத்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களை பயமுறுத்தும் புதிய வரி

மும்பை: புதிதாக தொழில் துவங்கும் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பங்கு  முதலீடு வசூ,லிக்கும் போது, சந்ைத மதிப்ைப தா்ண்டி வசூலித்திருந்தால் அந்த பணத்துக்கு ‘ஏஞ்சல் டேக்ஸ்’ என்ற  பெயரில் வரி வசூலிக்கப்படுகிறது. இதனால் பல புதிய  தொழில் நிறுவனங்களும் பீதியில் உறைந்துள்ளன. வரிச்சலுகை கிடைக்கும் என்று நினைத்ததற்கு மாறாக இப்படி வரி வசூலிப்பதால் லாபத்தை இழக்கும் நிலை  ஏற்பட்டுள்ளது.

‘ஏஞ்சல்’  வரிக்கு அடுத்து புதிய பூதம் இப்போது பயமுறுத்த ஆரம்பித்துள்ளது.  அது தான், வருமான வரித்துறை போடப்போகும் புதிய வரி. சில நிறுவனங்கள், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை வைத்து தான் தொழில் நடத்தி வருகின்றன. இந்த முதலீடுகளுக்கு சில கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இதை மீறும் நிறுவனங்களை கண்டுபிடித்து அவர்கள் அதிகமாக வெளிநாட்டு  முதலீடு வாங்கினாலோ, சட்ட விதிகளை மீறி முதலீடு திரட்டியிருந்தாலோ 30 சதவீத வரி போட திட்டமிட்டுள்ளது வருமான வரித்துறை. இப்படி வரும் வெளிநாடு நேரடி முதலீடு மூலமும் கறுப்பு பணம் இந்தியாவுக்குள் வரலாம் என்று சந்தேகிப்பதால் இப்படி அபராதம் போட அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : startup companies , Next to the Angel tax, Startup companies , new line of scary
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின்...