×

பொலிவிழந்து காணப்படும் வள்ளுவர் கோட்டம் ரூ.70 லட்சத்தில் புனரமைப்பு: 3 மாதங்களில் முடிக்க திட்டம்

சென்னை: வள்ளுவர் கோட்டத்தை ரூ.70 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, மராமத்து பணிகளை பொதுப்பணித்துறை தொடங்கியுள்ள நிலையில் 3  மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் அமைந்துள்ளது. இந்த கோட்டத்தில் பெரிய அரங்கம் ஒன்றும், பின்பகுதியில் திருவாரூரை தேரை நினைவுப்படுத்தும்  வகையில் சிற்ப தேர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வள்ளுவர் கோட்டத்தில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், தேரில் உள்ள சிற்பங்கள் தற்போது தூசி படிந்து தெளிவாக தெரியவில்லை.  மேலும், கோட்டத்தில் அமைந்துள்ள சிலைகளில் சிலவற்றை சிதிலமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வள்ளுவர் கோட்டத்தின் சுற்றுச்சுவர் வண்ணம் பூசி பல ஆண்டுகள் ஆவதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.  மேலும், உட்பகுதியில் உள்ள பிரம்மாண்ட அரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வண்ணம் பூசி பல ஆண்டுகள் ஆவதால், அந்த கால அரண்மனை போன்று மாறி வருகிறது.

 தேரில் பிரம்மாண்டமாக தொங்கி கொண்டிருந்த தேர் சீலைகள் கிழிந்து கந்தல்,கந்தலாக தொங்கி கொண்டிருக்கிறது. இதை சரிவர பராமரிக்கப்படாததால் வள்ளுவர் கோட்டம் சின்னம் நாளுக்குள் நாள் பொலிவிழந்து வருகிறது.  இதை தொடர்ந்து இலக்கிய நினைவு சின்னமான வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதை தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் ரூ.70 லட்சம் செலவில் வள்ளுவர் கோட்டத்தை புனரமைப்பு  பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது. தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் டெண்டர் விடப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த ஒப்பந்த நிறுவனம்  சார்பில்கட்டுமான பணிகளை தொடங்கியுள்ள நிலையில் 3 மாதங்களில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள தேர், சிலைகளை மராமத்து பணி மேற்கொள்ளுதல். அரங்கம், மற்றும் சுற்றுச்சுவர்கள், நுழைவு வாயிலில் பொழிவுப்படுத்தும்  பணிகள் செய்யப்படுகிறது. இந்த பணிகளை இன்று தொடங்கி 3 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிலைகள், ேதரில் உள்ள சிற்பங்கள், சிலைகளில் மராமத்து பணி செய்ய புதுக்கோட்டையில் இருந்து ஸ்தபதி  ஒருவர் வருகிறார். அவர் மூலம் சிற்பங்களை பொழிவுப்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறார்’ என்றார்.

ரூ.14 கோடிக்கு ரூ.70 லட்சம் கொடுத்த அவலம்: வள்ளுவர் கோட்டத்தை புனரமைக்கு பணிக்கு ரூ.14 கோடி தமிழக அரசிடம் நிதி கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசு சார்பில் ரூ.70 லட்சம் மட்டுமே புனரமைப்பு  பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி மராமத்து பணி மேற்கொள்ள போதுமானதாக இல்லை என்பதால் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி மீண்டும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Poly, Valluvar Division, Reconstruction
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...